அப்போ நயன்தாரா-க்கு.. இப்ப சுந்தர் சி-க்கு.. வில்லனாக மிரட்டும் அனுராக் .. என்ன கேரக்டர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை த்ரிஷாவின் நடிப்பில் பரமபதம் விளையாட்டு என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் திருஞானம்.

Advertising
>
Advertising

Also Read | "12 வருஷத்துக்கு அப்றம்.." சசிகுமார் டைரக்ஷன்.? "பிரபல ஹீரோவின் மகன் தான் நடிகரா?.. செம"

இதனையடுத்து, இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி, நாயகனாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம் ஒன்றை திருஞானம் இயக்கி வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தது.

அரண்மனை 3 படத்தை இயக்கி நடித்திருந்த சுந்தர் சி, அடுத்ததாக பட்டாம்பூச்சி, வல்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அசத்தல் தகவல்..

இதில், பட்டாம்பூச்சி திரைப்படத்தில், சுந்தர் சி நாயகனாக நடிக்க, நடிகர் ஜெய், வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளது, பட்டாம்பூச்சி படத்தின் டீசர் மூலம் தெரிய வருகிறது. இந்நிலையில், சுந்தர் சி நடிக்கவுள்ள அடுத்து நடித்து வரும் 'One 2 One' திரைப்படம் குறித்து சில அசத்தலான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பரமபதம் விளையாட்டு படத்தினை இயக்கி இருந்த திருஞானம், சுந்தர் சிஐயை வைத்து One 2 One என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், சுந்தர் சிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். நடிகையும், சுந்தர் சியின் மனைவியுமான குஷ்பூ, அனுராக் மற்றும் சுந்தர். சி ஆகுயோருடன்  இருக்கும் புகைப்படம் ஒன்றை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அனுராக் கதாபாத்திரம் இது தான்..

மேலும், இந்த பதிவில், அனுராக் மற்றும் சுந்தர் சி இணைந்து நடித்து வருவதை உறுதியும் செய்திருந்தார் குஷ்பூ. இதனிடையே, இந்த படத்தில் அனுராக் கதாபாத்திரம் என்ன என்பது பற்றி தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. என்கவுண்டர் போலீஸ் கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப் நடித்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல், விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

பாலிவுட்டில் நிறைய படங்களை இயக்கியும், தயாரிக்கவும் செய்துள்ள அனுராக் காஷ்யப், தமிழில் ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நயன்தாரா, அதர்வா மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த "இமைக்கா நொடிகள்" படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தமிழ் படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருஞானம் இயக்கும் One 2 One திரைப்படத்தில், சுந்தர் சியுடன் நடிகை ராகினி திவேதியும் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அப்போ நயன்தாரா-க்கு.. இப்ப சுந்தர் சி-க்கு.. வில்லனாக மிரட்டும் அனுராக் .. என்ன கேரக்டர்? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anurag kashyap opposite to sundar c role revealed sources

People looking for online information on Anurag Kashyap, அனுராக், சுந்தர் சி, நயன்தாரா, Sundar C will find this news story useful.