'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்குநர் பா.ரஞ்சித்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read | கேங்ஸ்டர் லுக்கில் சிம்பு.. ரிலீஸ் தேதியுடன் 'வெந்து தணிந்தது காடு' புதிய அதிரடி போஸ்டர்!
மும்பை, ஆக 29:- ஆர்யா நடிப்பில் 80களின் சென்னையில் நடக்கும் குத்துச்சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இயக்குநர் பா. இரஞ்சித் காதல் களத்தை தேர்ந்தெடுத்துள்ளதுடன் அனைத்து சமூகத்திலும் இருக்கும் காதல் மற்றும் காதலின் புறத்தே நிகழும் சமூக அரசியல் உள்ளிட்டவற்றை பேசும் நவீன கதையாடல் முறையில் கதை சொல்லியிருக்கிறார். இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் ‘தெருக்குரல்’ அறிவு எழுதிய ரங்கராட்டினம் என்கிற சிங்கிள் பாடலும், ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக
இயக்குநர் இரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கேரளா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். அந்தவகையில், மும்பை சென்ற நட்சத்திரம் நகர்கிறது படக்குழு மும்பையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டது.
இந்த சிறப்பு திரையிடலில் கலந்துகொண்ட, பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் மற்றும் நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்டோர் படத்தை பார்த்துள்ளனர். இந்த திரைப்படத்தை பார்த்த பின்னர் அனைவருமே படக்குழுவினரையும் இயக்குநர் ரஞ்சித்தையும் பாராட்டியுள்ளனர்.
குறிப்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குனர் பா.ரஞ்சித்தை கன்னத்தை பிடித்து நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். இந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | Hrithik Roshan: ரசிகர் காலில் விழுந்த ஹிருத்திக் ரோஷன்.. ‘எதனால இப்படி பண்ணாரு?’ - வைரல் வீடியோ