மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், தமிழில் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் க்யூட்டான அனுபாமாவை தமிழ் ரசிகர்கள் ரசிக்கின்றனர். தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
இதனிடையே தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் படங்களில் இவருடைய கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிக்கும்படியே இருக்கும். திடீரென தெலுங்கு படத்தில் லிப் கிஸ் காட்சியில் அனுபமா நடித்திருக்கிறார். ரவுடி பாய்ஸ் படத்தில் முதன் முறையாக முத்தக் காட்சியில் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகினர்.
இப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் ஆஷிஷ் ரெட்டி ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் கடந்த ஜனவரி 14ம் தேதி வெளியானது. அதேபோன்று அனுபாமா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
அந்த வகையில் தற்போது தனது தந்தையுடன் கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் அனுபாமாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா. அதுக்குள்ளேயும் கர்ப்பமா என்று பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த புகைப்படம் Maniyarayile Ashokan படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படம் என்று அனுபாமா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாழ்த்துகள் அனு, செம என்று பாராட்டி வருகின்றனர். இதை தவிர இவர் மலையாளத்தில் ஒரு நெட்பிளிக்ஸ் தொடரில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.