அனுபமா பரமேஸ்வரன் & ரெஜினா இணைந்து நடிக்கும் புதிய படம்.. MUSIC யாரு தெரியுமா? COLOURFUL போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | புது படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் பிரபல இயக்குனர்.. BTS போட்டோவுடன் வெளிவந்த தெறி அப்டேட்!

2015-ல் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கேரளாவைச் சார்ந்த அனுபமா பரமேஸ்வரன்.

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து தெலுங்கில் பிரபலமானார்.

கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது.

அனுபமா  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

தெலுங்கில் வரும் ஜூலை 22 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி சில நாட்களுக்கு முன் ப்ரோமோஷன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்து இருந்தார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தான் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மரிசிக்கா என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விராஜ் அஸ்வின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரெஜினா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

காதல், துரோகம், பழிக்கு பழி என வாசகத்துடன் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

Also Read | கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார்.. பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான கலர்ஃபுல் போஸ்டர்!!

தொடர்புடைய இணைப்புகள்

Anupama Parameswaran Regina Cassandra Mareechika Movie Poster

People looking for online information on Anupama Parameswaran, Mareechika Movie, Mareechika Movie Poster, Regina Cassandra will find this news story useful.