நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் பகிர்ந்துள்ள அவரின் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

'RRR' பட ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து நெகிழ வைத்த ராம் சரண்..!
பிரேமம் தந்த அறிமுகம்…
மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'ப்ரேமம்', படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமே வெளியாகி இருந்தாலும், அந்த படத்தின் மொழி தாண்டிய வெற்றியால் பிற மொழி ரசிகர்களும் அந்த படத்தின் அனைத்துக் கலைஞர்களையும் ஏற்றுக் கொண்டாடினர். இதனால் அந்த படத்தில் நடித்த சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோன்னா செபாஸ்டியன் ஆகிய மூவருமே தற்போது முன்னணி கதாநாயகிகளாக இருக்கின்றனர்.
தமி்ழ், தெலுங்கு படங்கள்….
பிரேமம் வெற்றிக்கு அடுத்தடுத்து தமிழில் ‘கொடி’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
தள்ளிப்போகாதே….
தமிழில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சமீபத்தில் தள்ளிப் போகாதே திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். ஆர் கண்ணன் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகி கவனத்தைப் பெற்றது.
புடவையில் அனுபமா…
இந்நிலையில் சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றி வருகிறார். அந்த வரிசையில் இப்போது தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் புடவையில் இருக்கும் அவர் அவர் கேப்ஷனாக ‘புடவை உடுத்துவது என்பது ஒரு கலை’ என்று கூறியுள்ளார். அனுபமாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகின்றன.
பிரசவத்துக்குப் பிறகு முதல் முறையாக ரசிகர்களோடு உரையாடிய ஆல்யா மானசா! வைரல் ஸ்டோரி