பட ரிலீஸை ஒட்டி போட்டோ ஷூட் நடத்திய அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.

Advertising
>
Advertising

Also Read | சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. ரிலீசான முதல் சிங்கிள் பாடல்! எப்படி இருக்கு

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான  நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபாமா  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் தெலுங்கில் வரும் ஜூலை 22 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி ப்ரோமோஷன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை போட்டோ கிராபர் சரத் சந்திரா எடுத்துள்ளார்.

Also Read | புதிய படத்தின் ரிலீஸ்.. நடிகை ராஸி கண்ணா HOT போட்டோஷூட்! வைரல் ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Anupama Parameswaran Latest Photoshoot Photos went Viral

People looking for online information on Anupama Parameswaran, Anupama Parameswaran Latest Photoshoot will find this news story useful.