புதிய படத்தின் ரிலீஸ்.. ப்ரோமோஷன் போட்டோ ஷூட் நடத்திய அனுபமா பரமேஸ்வரன்! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.

Advertising
>
Advertising

Also Read | 'கைதி' படத்தின் இந்தி ரீமேக்.. இயக்குனரான நடிகர் அஜய் தேவ்கன்.. தெறிக்க விடும் BTS போட்டோ!

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது.

அனுபமா  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் தெலுங்கில் வரும் ஜூலை 22 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி ப்ரோமோஷன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை போட்டோ கிராபர் ராகுல் எடுத்துள்ளார்.

Also Read | பில்லா ஸ்டைலில் லண்டனில் வலம் வந்த நடிகர் அஜித்குமார்.. அந்த கெத்து அப்படியே! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anupama Parameswaran Latest Photoshoot for Karthikeya 2 Movie

People looking for online information on Anupama Parameswaran, Anupama Parameswaran Latest Photoshoot, அனுபமா பரமேஸ்வரன், Karthikeya 2 Movie will find this news story useful.