நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
![Anupama Parameswaran Latest Photos in Silk Saree Anupama Parameswaran Latest Photos in Silk Saree](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/anupama-parameswaran-latest-photos-in-silk-saree-new-home-mob-index.jpeg)
மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது. அனுபமா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தெலுங்கில் வரும் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி அவ்வப்போது ப்ரோமோஷன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் & வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கார்த்திகேயா -2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது உடுத்திய பட்டுப்புடவையில் சில புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு "இந்த புடவையில் எனது அம்மா போல இருப்பதாக தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. .