"பிச்சை எடுக்க பிடிக்கல.. படிக்க வைங்க சார்".. FLUENT ஆங்கிலத்தில் நடிகரிடம், பெண் கோரிக்கை!.. VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் தர்மம் பெறக் கூடிய இளம் பெண் ஒருவருடன் உரையாடக்கூடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அவரே தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

காத்மண்டு பகுதியில் அனுபம் கெர் ஒரு இளம் பெண்ணை பார்த்திருக்கிறார். அந்த இளம் பெண்அவரிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார். இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது. அதில் அந்த இளம் பெண், “என் பெயர் ஆர்த்தி, நான் உங்களை பார்ப்பதில் மிகவும் உற்சாகமாகிறேன். நான் இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவள்” என்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுபம் கெர் அண்மையில் காத்மண்டு சென்றபோதுதான் இந்த ஆர்த்தியை பார்த்திருக்கிறார்.

அவரைக் கண்ட ஆர்த்தி, தன் கனவை நிறைவேற்ற முடியுமா என்று அவரிடம் கோரிக்கை வைக்கிறார். அதற்கு அனுபம் கெர், தன்னுடைய அறக்கட்டளை ஆர்த்திக்கு உதவும் என்று கூறுகிறார்.

மேலும் ஆர்த்தி பேசும்போது, “நான் பிச்சை எடுக்கிறேன். நான் பள்ளிக்கு செல்வதில்லை. பிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். என்னுடைய ஆங்கிலம் எப்படி இருக்கிறது?” என்று அவரிடமே கேட்கிறார். அவர் அதற்கு வெகுவாக பாராட்டுகிறார். மேலும் தான் ஏழை குடும்பத்தில் இருந்து வருவதால் பிச்சை எடுப்பதாகவும் வேறு வழி இல்லை என்றும் ஆர்த்தி ஆங்கிலத்தில் அவரிடம் கூறுகிறார்.

“ஆனாலும் நீ வேலை செய்ய வேண்டும்” என்று அனுபம் கெர், ஆர்த்தியிடம் கூறுகிறார். மேலும் “நீ நன்றாக ஆங்கிலம் பேசுகிறாய்.. யாராவது உனக்கு வேலை கொடுப்பார்களே..”  என்று  அனுபம் கெர் கூற, “யாரும் எனக்கு வேலை கொடுக்கவில்லை” என்று கூறும் ஆர்த்தி, “நீங்கள் ஏன் இந்தியாவிலிருந்து காத்மண்டு வந்தீர்கள்?” என்று அனுபம் கெர் கேட்கும் கேள்விக்கு, “இந்தியாவிலும் இதே பிரச்சினை உள்ளது. ஆனால் இங்கு அது பரவாயில்லை!” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் ஆர்த்தி கூறும்போது, தான் பள்ளிக்கு செல்ல விரும்புவதாகவும், தனக்கு உதவுமாறும், அப்போதுதான் தான் மீண்டும் பள்ளிக்கு சென்று படித்து தன் எதிர்காலத்தை மாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் ஆர்த்தியிட தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட அனுபம் கெர், ஆர்த்தியை பள்ளிக்கு அனுப்புவதாக வாக்கு கொடுத்துவிட்டு வந்தார்.

இந்த தகவல்களை வீடியோவுடன் அனுபம் கெர், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து, இந்த வீடியோ நிகழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Anupam Kher meets an English speaking girl who is begging

People looking for online information on Anupam Kher will find this news story useful.