ANNAATTHE UPDATE: அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! மோஷன் போஸ்டர் எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர்.

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நாளை காலை 11 மணிக்கு முதல்லுக் போஸ்டரும்,  மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Annaatthe movie firstlook motion poster update

People looking for online information on Rajinikanth, Siruthai Siva will find this news story useful.