LATEST: "அண்ணாத்த" படப்பிடிப்பு தளத்தின் வைரலாகும் BTS படம்!!! அழகோ அழகு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர்.

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் லக்னோ மற்றும் கொல்கத்தா பகுதிகளில் நடப்பதாகவும், இந்த படப்பிடிப்புகள் இம்மாதம் (ஆகஸ்ட்) 19-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. அதே சமயம் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் போர்ஷன் இல்லாததால், அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைபிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சிவாவிற்கு வாழ்த்து தெரிவித்து, அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

மோனோ குரொமேட்டிக்கில் உள்ள இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கொள்ளை அழகாக உள்ளார்.  

தொடர்புடைய இணைப்புகள்

Annaththe movie BTS picture went viral on social media

People looking for online information on Annaatthe, Keerthy Suresh, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.