போடு.. போடு.. ‘அண்ணாத்த’ படத்தின் 3வது சிங்கிள்!... புதிய போஸ்டருடன் வெளியான கலர்ஃபுல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அண்ணாத்த’.

Annaatthe Third Single release update announcement rajinikanth

ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், வேல. ராம மூர்த்தி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

Annaatthe Third Single release update announcement rajinikanth

தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அண்ணாத்த அண்ணாத்த, சாரக்காற்றே ஆகிய முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகியுள்ளன. இதேபோல் இந்த படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்ட டீசரும் கடந்த 14.10.2021 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்த டீசர் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெறும் 3வது பாடலான மருதாணி என்கிற பாடல் அக்டோபர் 18 அன்று வெளியாகிறது. இப்படம் தொடர்பான போஸ்டரில் மீனா மற்றும் குஷ்பு இடம் பெற்றுள்ளனர்.

ரஜினிகாந்துடன் அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் குஷ்புவும், முத்து உள்ளிட்ட படங்களில் மீனாவும் ஹீரோயினாக நடித்துளனர் என்பதும் அந்த படங்கள் ஹிட் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Annaatthe Third Single release update announcement rajinikanth

People looking for online information on Annaatthe, AnnaattheThirdSingle, D Imman, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.