திடிரென OTT-யில் வெளியான "அண்ணாத்த" திரைப்படம்! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

Annaatthe Sudden OTT Release superstar Fans are happy
Advertising
>
Advertising

இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிற்ய்வனம் தயாரித்துள்ளது.  இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்தனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Annaatthe Sudden OTT Release superstar Fans are happy

விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. குறிப்பாக அண்ணாத்த (தமிழ்) - பெத்தண்ணா (தெலுங்கு) படத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, ஐரோப்பா, மலேசியா, மிடில் ஈஸ்ட், வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இந்த படம் வெளிவந்து மூன்று வாரங்களே ஆன நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தனது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  திரையரங்க வெளியீட்டுக்கு பின் 4 வாரங்கள் கடந்த பிறகே திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட வேண்டும் என்ற விதிமுறை சினிமா வட்டாரங்களில் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Annaatthe Sudden OTT Release superstar Fans are happy

People looking for online information on Annaaththe, Rajinikanth, Siva will find this news story useful.