VIDEO: "அஜித் கூட நடிக்க ஆசைப்படுகிறேன்!" - அண்ணாத்த, தீரன் பட வில்லன் 'அபிமன்யூ சிங்' பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

Annaatthe Dheeran Bollywood actor Abhimanyu Singh Interview
Advertising
>
Advertising

இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Annaatthe Dheeran Bollywood actor Abhimanyu Singh Interview

அண்ணாத்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் கைப்பற்றியது. விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து படத்தின் வில்லன் அபிமன்யூ சிங் நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். அபிமன்யூ ஏற்கனவே விஜய்யுடன் தலைவா, சூர்யாவுடன் ரத்த சரித்திரம்-2, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துள்ளார். 

VIDEO: "அஜித் கூட நடிக்க ஆசைப்படுகிறேன்!" - அண்ணாத்த, தீரன் பட வில்லன் 'அபிமன்யூ சிங்' பேட்டி! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Annaatthe Dheeran Bollywood actor Abhimanyu Singh Interview

People looking for online information on Abimanyu Singh, Ajith Kumar, Annaatthe, H Vinoth, Rajinikanth, Valimai will find this news story useful.