இந்திய திரை இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்களுள் ஒருவராக கருதப்படுபவர் இளையராஜா. அன்னக்கிளி துவங்கி பல வெற்றிப் படிக்கட்டுக்களில் அவர் ஏறியிருக்கிறார். தமிழ் மட்டும் அல்லாது பல மொழிகளில் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
Also Read | "என்னை மன்னிச்சுக்கோங்க".. வெளியேறிய பின் ஜனனி பகிர்ந்த உருக்கமான பதிவு!!.. bigg boss 6 tamil
முன்னதாக காசி தமிழ் சங்க விழாவின் இறுதி நாட்களில் இசைஞானி இளையராஜா காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டார். பின்னர் இசை கச்சேரியும் நடைபெற்றது. இவ்விழாவில் தேவாரம், திருவாசகம் மற்றும் பாரதியார் பாடல்கள் என பலவற்றை இளையராஜா பாடியிருக்கிறார். அதேபோல. தமிழ் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாட, அங்கு வந்திருந்த அனைவரும் அதனை ரசித்தனர்.
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய இசைஞானி இளையராஜா, “சிவாஜி கணேசன் அண்ணா என்னை ராஜா என சொல்ல மாட்டார். ராசா என தான் சொல்லுவார். எங்கள் ஸ்டூடியோவுக்கு உள்ளே வரும்போது வரலாமா என கேட்டார். நீங்கள் வருவீர்கள் என தவம் கிடக்கிறோம். என்ன அண்ணா இது என கேட்டேன். அதற்கு சிவாஜி அண்ணா, ‘உன்னை பத்தி நிறைய சொல்றாங்கப்பா..’ என சொன்னார். அதற்கு பதிலுக்கு நான் சொன்னேன், ‘அண்ணா.. சொல்றவங்க கதையெல்லாம் நம்பிகிட்டு நீங்களுமா இப்படி கேக்குறீங்க’ என்றேன்” என பேசியுள்ளார்
Also Read | FIFA: இந்த வருசத்தோட மிகவும் மகிழ்ச்சியான நாள்.. தனுஷ் வைரல் ட்வீட்!