"மதுரையில் கடைசி நாள்".. சூரி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்த அனா பென்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சூரி.

Advertising
>
Advertising

Also Read | பா‌. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை - 2.. போஸ்டருடன் வெளியான சூப்பர் அறிவிப்பு!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேதாளம், அண்ணாத்த, டான், சீமராஜா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது நடிகர் சூரி, கூழாங்கல் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில்  நடந்தது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கிறார். கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கபேலா, காப்பா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் தான் அன்னா பென்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை அன்னா பென், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " மிகவும் சிறப்பான ஒரு படத்தின் கடைசி நாள். என் மனதில் எத்தனையோ எண்ணங்கள் இருந்தாலும் என் இதயம் நிரம்பியிருப்பதை நான் அறிவேன்.

Images are subject to © copyright to their respective owners.

என் இதயத்தின் ஒரு பகுதியை மதுரையில் விட்டுச் செல்வது இதை எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கும். மதுரை மக்களும் இந்த அனுபவமும் சிறப்பு வாய்ந்தது". என அன்னா பென் பதிவிட்டுள்ளார்.

Also Read | "என்னோட ஏஞ்சல் பாய்".. செல்ல நாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை நஸ்ரியா!

தொடர்புடைய இணைப்புகள்

Anna Ben Instagram Post about Soori and Madurai

People looking for online information on Anna Ben, Anna Ben Instagram Post, Soori will find this news story useful.