அரபிக்குத்துக்கு ஆடுன சேலையோடு JOLLY O ஜிம்கானா பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடிய அஞ்சு குரியன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு பட்டுச்சேலையில் நடிகை அஞ்சு குரியன் செம்மய்யான குத்து டான்ஸ் ஆடியுள்ளார்.

Advertising
>
Advertising

பிகினி உடையில் நடிகை இலியானா... நண்பர்களுடன் ஹோலி கொண்டாடிய லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அஞ்சு குரியன் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு சேலையில் நடனமாடி உள்ளார். இந்த வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே நடிகை அஞ்சுகுரியன் இன்ஸ்டாகிராமில் அரபிக்குத்து பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்துள்ளார். அஞ்சு குரியன் பிரேமம், யான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தவர். தமிழிலும் சென்னை 2 சிங்கப்பூர், இக்லூ  படங்களில் நடித்துள்ளார்.

 

TRENDING: முதல் முறையாக நடிகை தமன்னா வெளியிட்ட மாலத்தீவு Mash Up பிகினி வீடியோ!

 

தொடர்புடைய இணைப்புகள்

Anju Kuriyan Kuthu Dance for Beast Jolly O Gymkhana Song

People looking for online information on Anju Kuriyan, அஞ்சு குரியன், ஜாலியோ ஜிம்கானா, பீஸ்ட், Beast, Jolly o gymkhana Song, Kuthu Dance will find this news story useful.