FALL : அஞ்சலி நடிக்கும் விறுவிறுப்பான ஃபால் வெப் தொடர்.. வெளியான அடுத்த எபிசோடுகள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “ஃபால்” வெப் சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 2022, டிசம்பர் 9-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

Advertising
>
Advertising

Also Read | Avatar 2 FDFS : ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படம்.. எப்படி இருக்கு..? ரசிகர்கள் சொல்வது என்ன? Avatar: The Way of Water

"வெர்டிஜ்"  எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார். நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் , ராஜ்மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். 

திவ்யா என்ற இளம் பெண்ணாக வரும் அஞ்சலிக்கு, தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட, விழுந்ததால் அவர், கோமாவுக்கு சென்றுவிடுகிறார். இதனிடையே அஞ்சலி நடத்தி வரும் ஸ்போர்ட்ஸ் செண்டர் இடத்துக்கு டிமாண்ட் அதிகரிக்கிறது.  இதன் காரணமாக அஞ்சலிக்கு இந்த நிலை நேர்ந்திருக்கலாமா? என பல மர்ம முடிச்சுகள் முதல் 3 எபிசோடுகளில் போடப்படுகிறது.

டிசம்பர் 9-ஆம் தேதி வெளியான இந்த எபிசோடிகள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உண்டாக்கியதை அடுத்து, இந்த சீரிஸின் 4வது மற்றும் 5வது எபிசோடுகளும் வெளியாகியுள்ளன. இந்த 4வது மற்றும் 5அது எபிசோடுகளில் கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ள அஞ்சலிக்கு, தான் விழுந்த நாளின் 24 மணி நேர விஷயங்கள் மட்டும் நினைவில் இருக்க, அவற்றை வைத்துக்கொண்டு, உண்மையில் என்ன நடந்தது? அஞ்சலி தானாக விழுந்துவிட்டாரா? இல்லை யாரோ தள்ளிவிட்டார்களா? என்கிற உண்மைகளை தன் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் தேடுகிறார். இதற்காக அஞ்சலி சிலருடன் மைண்ட் கேம் ஆட வேண்டியுமுள்ளது. 

சீட் நுனியில் அமரவைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தை தருவதாக பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.  ‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார். ‘ஃபால்’ தொடர் ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்த, Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது பெற்ற "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | ‘ஈரம்’ பட இயக்குநர் & நடிகர் ஆதி இணையும் அடுத்த ஹாரர் படம்.. இசை தமன்.. டைட்டில் இதுதான்!!

தொடர்புடைய இணைப்புகள்

Anjali Fall Disney Plus Hotstar next episodes update

People looking for online information on Anjali, Disney Plus Hotstar, Fall, Fall Update, FALL Web series will find this news story useful.