கேள்வியால் வேலி போட்ட ஜூலி! ‘நீங்க செய்றத வெச்சே சொல்லிடுவேன்!’.. அசராத அனிதா! #BBULTIMATETAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BBUltimateTamil, சென்னை 02, பிப்ரவரி 2022:- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

பிக்பாஸ் ஓடிடி

இந்த ஐந்து சீசன் நிகழ்ச்சிகளையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்திருந்தார். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கிராண்ட் ஃபினாலே அண்மையில் நடந்தது. இந்த கிராண்ட் ஃபினாலே வெற்றி பெற்றவராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதில் பிரியங்கா  ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டார்

Also Read: போடு சக்க.. குக் வித் கோமாளி 3-ல் புகழ்!.. கெத்து எண்ட்ரி.. ஆனா வந்தவுடனே வாங்கிய உதை.. தெறி ப்ரோமோ

பின்னர் அதே மேடையில் வைத்து கமல்ஹாசன் ஒரு புதிய அறிவிப்பையும் அறிவித்திருந்தார். அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி 24 நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகக் கூடிய வகையில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

பிக்பாஸ் அல்டிமேட்

ஆம், பிக்பாஸ் அல்டிமேட் என்கிற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, முந்தைய சீசன் போட்டியாளர்களை கொண்டு நடக்கும் என்றும் கமல்ஹாசன் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார். அதன்படி பிக்பாஸ் ஓடிடியில் இந்த நிகழ்ச்சி தற்போது தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடங்கப்பட்டவுடனே அனைவரும் சக போட்டியாளர்களை நாமினேட் செய்திருந்தனர்.

செலிபிரிட்டி பிரஸ்மீட்

இதனைத் தொடர்ந்து தற்போது செலிபிரிட்டி பிரஸ்மீட் என்கிற ஒரு டாஸ்க் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களின் முன்னிலையில் ஒரு செலிபிரிட்டி போல் அமர்ந்து பிரஸ்மீட்டில் பதில் சொல்வதுபோல் பதில் சொல்லவேண்டும். மற்ற போட்டியாளர்கள் பிரஸ்மீட்டில் ஒரு செலிபிரிட்டியிடம் கேள்வி கேட்பது போல் கேள்வி கேட்பார்கள்.

ஜூலி கேள்வி.. அசராத அனிதா 

அப்படி இந்த நிகழ்ச்சி சக போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து அனிதா சம்பத்தை கேள்வி கேட்டனர். அப்போது ஜூலி, ஒரு குறிப்பிட்ட பாடலை குறிப்பிட்டு, “நான் பல பாடல்களை பாடியுள்ளபோது குறிப்பிட்ட இந்த பாடலை மட்டும் நான் கவன ஈர்ப்பு செய்வதற்காக பாடியதாக எப்படி நீங்கள் சொல்லலாம்?” என்று ஆவேசமாக கேட்டார். அதற்கு சற்றும் தளராமல் பதிலளிக்கும் அனிதா சம்பத், “எனக்கு தெரியும் ஜூலி நீங்கள் செய்வதை வைத்தே, நீங்கள் அதை நேச்சுரலாக செய்கிறீர்களா.. இல்லை கவன ஈர்ப்புக்காக செய்கிறீர்களா.. என்பதை நான் கால்குலேட் பண்ணிவிடுவேன்!” என்று பதில் கூறுகிறார்.

என்னென்ன நடக்குமோ?

முந்தைய சீசன் போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட முதலிலிருந்தே, முந்தைய வெவ்வேறு சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் இப்படி பிக்பாஸ் ஓடிடியின் ஒரே சீசனில் இடம்பெறும்போது அவர்களுக்கு இடையே எழும் முரண்கள், பேச்சுவார்த்தை, சண்டை சச்சரவுகள், வாக்குவாதம் உள்ளிட்டவை எப்படி இருக்கப் போகிறது என்று அனைவருக்குமே ஆர்வம் தொற்றிக்கொண்டது.

அந்த ஆர்வத்தை நிறைவுபடுத்தும் விதமாக இப்போது போட்டியாளர்கள் எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: முகமே சுண்டி போச்சு! புது கோமாளிய கடுமையா திட்டிய Chef தாமு.. அதுக்கு அப்றம் நடந்ததுதான் ஆசம்!

தொடர்புடைய இணைப்புகள்

Anitha replies to julie question BiggBoss Ultimate Tamil

People looking for online information on Anitha Sampath, BBUltimateTamil, Bigg Boss Julie, Bigg Boss OTT, Bigg Boss Ultimate Tamil, BiggBoss Ultimate Tamil will find this news story useful.