வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பாலாஜி, ஷிவானி, ரம்யா, அனிதா, சனம் ஆகியோர் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பாலாஜி இந்த வாரம் சனம் போகட்டும் அப்புறம் பாருங்க என்பது போல பெருமை பேசிக்கொண்டு இருந்தார். இதை கேட்டவுடன் அனிதாவுக்கு வந்ததே ஒரு வேகம்.

நீங்க பிக்பாஸ் வந்ததுல இருந்து இதைத்தான் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா பத்து வாரம் ஆகியும் கூட சனம் வெளில போக காணோம். எனக்கு என்னவோ பைனஸ்ல நீங்களும் சனமும் நிக்க போறீங்க கமல் சார் உங்க ரெண்டு பேர் கையையும் புடிச்சு யாரு வின்னர்னு சொல்ல போறாரு என நெத்தியடியாக பதில் கொடுத்தார். இதற்கு பாலாஜியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
ஆரி, பாலாஜி, அனிதா, சனம், ராமயா ஆகிய ஐவரும் தங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதால், இவர்கள் இறுதிப்போட்டி வரை முன்னேற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் சனம் பைனல்ஸ் வரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சம்யுக்தாவை நாமினேஷனில் கோர்த்து விட்டு காலி செய்த அனிதா, தற்போது சனம் குறித்து சொன்னது உண்மையாகுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.