விஜய் டிவியில் எந்த அளவுக்கு பிக்பாஸ் சீசன்கள் வரவேற்பினை பெற்றதோ, அந்த அளவுக்கு ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

BB Ultimate : "ஆஹா, யாருங்க இது??.." சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த நடிகை.. திக்குமுக்காடி போன ரசிகர்கள்
இந்த நிகழ்ச்சியினை 24 மணி நேரமும் ரசிகர்கள் கவனிக்க முடியும் என்பதால், பல சர்ச்சைகள் மற்றும் சண்டை தொடர்பான காட்சிகள், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதே போல, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
வைல்டு கார்ட் என்ட்ரி
மற்ற பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து, மொத்தம் 15 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் களமிறங்கினர். இதில், வனிதா மன உளைச்சல் காரணமாக, பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும், எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், வைல்டு கார்டு என்ட்ரியில் மீண்டும் உள்ளே வந்தார். அதன் பிறகு, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு போட்டியாளர் சதீஷ் என்ட்ரி கொடுத்தார்.
ரம்யா பாண்டியன் 'என்ட்ரி'
இதற்கு அடுத்தபடியாக, பெண் போட்டியாளர் ஒருவர் களமிறங்குவார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது. ஓவியா அல்லது லாஸ்லியா ஆகிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் களமிறங்க போகிறார்கள் என்றும் ஒரு பக்கம் தகவல்கள் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் நான்காம் சீசனில் பங்கேற்ற நடிகை ரம்யா பாண்டியன், சர்ப்ரைஸ் என்ட்ரியாக உள்ளே வந்தார். அவரை பார்த்ததும், பிக்பாஸ் ஹவுஸ்மேட்கள் மகிழ்ச்சியில் திளைத்து போய், அவரைக் கட்டித் தழுவி வரவேற்றனர்.
எது மிஸ் ஆயிருக்கு?
இதனிடையே, பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யா பாண்டியன் வந்த பிறகு, அவரிடம் தாமரை மற்றும் அனிதா ஆகியோர் கேள்வி கேட்கும் ப்ரோமோக்கள், மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரம்யாவிடம், "இந்த கேமில் எது lack ஆகிறது என நீ நினைக்குறே?" என கேட்கிறார். இதற்கு 'Fun' என ரம்யா பதிலளிக்க, "Fun இல்லன்னு நீ ஃபீல் பண்றேல்ல, அத நீ எப்படி fill பண்ணுவே?" என அனிதா அடுத்த கேள்வியை முன் வைக்கிறார்.
சரமாரி கேள்விகள்
அடுத்த ஆளாக, அனிதா அருகே இருக்கும் தாமரையும் முந்திக் கொண்டு வந்து, "இந்த கேம்ல சுவாரஸ்யம் இல்லன்னு நீங்க சொல்றீங்க?. அத தெரிஞ்சிட்டு தான் உள்ளேயும் வந்துருக்கீங்க.. அதுக்கு நீங்க என்ன வெச்சுருக்கீங்க?" என கேள்விகளால் ரம்யாவை துளைத்து எடுக்கின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் மத்தியில், இந்த ப்ரோமோ பெரிய அளவில் ஹிட்டடித்து வருகிறது.
ஜூலியை தள்ளிவிட்ட பாலா.. மூச்சு விடத் திணறிய ஜூலி. "என்ன நடந்துச்சு??.." பதறிப் போன ரசிகர்கள்