இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜீத் மற்றும் கேப்ரியலா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். பாலாஜி கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் அறிவித்து விட்டார். இதையடுத்து பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்தார். இதற்காக போட்டியாளர்களின் பெயர்கள் கண்ணாடி குடுவையில் வைக்கப்பட்டு இருந்தன.
டாஸ்க் ஜாலியாக இல்லாமல் வேறு திசை நோக்கி சென்றது. இதனால் பிக்பாஸ் வீடு இன்று உண்மையிலேயே போர்க்களமாக மாறியது. ஷிவானி கேட்ட கேள்வி ஒன்றுக்கு ஆரி, அனிதாவை வைத்து விளக்கம் கொடுத்தார். அவர் பேச ஆரம்பிக்கும் போதே அனிதா இடையில் புகுந்து என் குடும்பத்தை பத்தி பேசாதீங்க என கத்த, ஆரி தன்னுடைய விளக்கத்தை நிறுத்தவில்லை. இதனால் அனிதா மேலும் கோபம் அடைந்தார்.
இருவரும் மாறி, மாறி பேசியபோது ஆரி டிஆர்பி டேலண்ட் என அனிதாவுக்கு பட்டம் கொடுத்தார். அவர் என் புருஷன், பிரபா பத்தி பேசாதீங்க என அனிதா சொன்னதற்கு ஆமாம். அவரு உன் புருஷன் தான் யாரு இல்லன்னு சொன்னது? என்றும் கேட்டார். கடைசியில் இது ஒருவழியாக முடிவுக்கு வந்தது. என்றாலும் இந்த வாரம் இதுகுறித்து கமல் கேள்வி கேட்டு, இதுகுறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையில் அனிதா, ஆரி இருவரில் யார் மீது தவறு உள்ளது? என சமூக வலைதளங்களில் காரசாரமான பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இதை வைத்து இரு ஆர்மிக்காரர்களும் மோதிக்கொள்ள இதற்கு அக்கம், பக்கம் உள்ள ஆர்மிகளும் சப்போர்ட் செய்து வருகின்றன. யார் மேல தப்பு இருக்குன்னு நீங்க நெனைக்குறீங்க?