டெலிகாலர் டாஸ்க் முடிந்தும் அதன் தாக்கம் பிக்பாஸ் வீட்டில் இன்னும் குறையவில்லை. குறிப்பாக சனமுக்கு இரண்டாம் இடம் கிடைத்ததை அனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்று பாலாஜியுடன் சேர்ந்து ஆரியை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். குறிப்பாக ஆரி, சனமுக்கு வாக்கெடுப்பு நடத்தியது தான் பிரச்சினை போல.
நீங்க ஏன் சனமுக்கு ஓட்டு கேட்டு சப்போர்ட் பண்ணீங்க? என்று அனிதா, ஆரியிடம் கேட்க, பதிலுக்கு ஆரி அவங்க அந்த இடத்துக்கு தகுதி ஆனவங்கன்னு தோணுச்சு அதான் கேட்டேன் என்று விளக்கம் கொடுத்தார். அதுக்கு சனம் தான சண்டை போடணும் நீங்க ஏன் அத செஞ்சீங்க என்று விதவிதமாக ஆரியை கேட்க எனக்கு நியாயம்னு பட்டது அதான் அவங்க பக்கம் நின்னேன் என்று ஆரி கூறினார்.
இடையில் ஆரியை அண்ணன் என்று அழைத்த பாலாஜி சனமுக்கு 10-வது இடம் தான் கரெக்ட் என்று தன் பங்குக்கு கொஞ்சம் ஒத்து ஊதினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி எப்போதுமே சனமுடன் சண்டை போடுவார். ஆனால் இவ்வளவு நாள் பிரண்ட் என சொல்லிக்கொண்டு இருந்த நீங்கள் இப்படி பல்டியடித்தது நன்றாக இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.