'இது அனிருத் இல்ல.. மினிருத்..!!' - ரஜினி ஸ்டைலில் சின்ன வயது போட்டோ.. இப்போ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அனிருத் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் அடித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் இசையமைத்த ஆல்பங்கள் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக ஒலித்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பலரது படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்த அனிருத், அடுத்து கமல் நடிக்கும் இந்தியன் 2, விக்ரம் மற்றும் த்ருவ் நடிக்கும் சீயான் 60 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். வெள்ளை பைஜாமா உடையில், ரஜினி ஸ்டைலில் எடுத்த தனது சிறுவயது போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''இதற்கு பிறகு நான் வளரவே இல்லை என்று சொல்கிறார்கள்'' என க்யூட்டாக பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் அடித்து வருவதோடு, 'இது அனிருத் இல்லை, மினிருத்' என ரசிகர்கள் ஜாலி கமன்ட்ஸ் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினி ஸ்டைலில் அனிருத் வெளியிட்ட சின்ன வயது புகைப்படம் வைரல் | anirudh's childhood rajini stule photo goes viral

People looking for online information on Anirudh Childhood Photo, Anirudh Ravichander, Rajinikanth will find this news story useful.