ராக் ஸ்டார் வித் ராஜா சார்.. இளையராஜாவுடன் குட்டி அனிருத்.. ட்ரெண்ட் ஆகும் THROWBACK PIC

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இசை அமைப்பாளராக திகழ்ந்து வருபவர் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் இசைஞானி இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "நான் BiggBossல இருந்தப்போ ராபர்ட்க்கு கல்யாணம்".. "சொந்த காசுல சூனியம் வெச்சுகிட்டேன்".... வனிதா Exclusive

ஏற்கனவே ஒரு முறை இணையதளத்தில் வைரலான இந்த புகைப்படம் மீண்டும் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் அனிருத் மிகவும் சிறிய வயதில் தோற்றமளிப்பதுடன், இசை ஞானி இளையராஜாவுடன் போஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் குட்டி அனிருத்தை இசைஞானியுடன் சேர்த்து பார்த்த பலரும் குஷி ஆகிவிட்டனர்.

ரசிகர்களால், பொதுமக்களால் இன்றும் தவிர்க்க முடியாத பாடல்களாக இசை ஞானி இளையராஜாவின் பாடல்கள் இருக்கின்றன. சமீபத்திய திரைப்படங்களான திருச்சிற்றம்பலம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் கூட இளையராஜாவின் நேரடி ரெஃபரன்ஸ்களை இயக்குநர்கள் பேசுபொருளாக வைத்திருந்தனர். இன்றைய அனிருத் பாடல்களை கேட்கும் 2கே கிட்ஸ் வரை பலரும் பல வேலைகளில் பல சூழ்நிலைகளுக்காக இளையராஜா பாடல்களை விரும்பி கேட்கின்றனர்.

இதே போல் அனிருத் இசையமைத்த பல பாடல்கள் இன்றைய இளைஞர்களுக்கு விருப்பப் பிளே லிஸ்ட் பாடல்களாக இருக்கின்றன. அனிருத் அண்மையில் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், திருச்சிற்றம்பலம், டான் உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு தம் இசையை பங்களிப்பாக தந்திருந்தார். அனிருத் லிஸ்டில் அடுத்ததாக இந்தியன் இரண்டாம் பாகம், அஜித் நடிக்கும் ஏகே 62, ஷாருக்கான் நடிக்கும் ஜவான், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன.

இசைஞானி இளையராஜா தற்போது வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட இந்த அரிய த்ரோபேக் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே மீண்டும் வைரல் ஆகிவருகிறது. 70ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | Vijay : விஜய், சிம்பு பங்குபெற்ற ‘வாரிசு’ அடுத்த சிங்கிள் Shoot.? நடன மாஸ்டர் இவரா..?

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh with Ilaiyaraaja Viral Throwback pic trending

People looking for online information on Anirudh, Ilaiyaraaja, Throwback, Viral Trending will find this news story useful.