விவேகம், வேதாளம் ஆகிய படங்களுக்கு பிறகு அஜித் 62 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read | சார்பட்டா வெற்றிக்குப் பின் மீண்டும் ஓடிடியில்… ஆர்யா நடிக்கும் வெப் சீரீஸ் Title அறிவிப்பு!
அஜித் 51 ஆவது பிறந்தநாள்…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜித் இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவரான அஜித் 10 ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார். ஆனாலும் நாளுக்கு நாள் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது. இதையடுத்து சமூகவலைதளங்களில் அவரின் ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை அவருக்கு பகிர்ந்து வருகின்றனர்.
அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்…
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 61 படத்தின் முதல் லுக் போஸ்டரோ அல்லது ஏதேனும் அப்டேட்டோ வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தயாரிப்பாளர் போனி கபூரின் பதிவு ஒன்று வைரலாகி உள்ளது. அந்த பதிவில் “ Built, Not bougt. Earned, not given. Hustled, not given. Rare, not average!” எனக் கூறியுள்ளார். இந்த பதிவு அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போல அமைந்துள்ளது. இந்த பதிவின் கீழ், ரசிகர்கள் பலரும் அஜித் 61 பட அப்டேட் கொடுங்கள் எனக் கேட்டு வருகின்றனர்.
அனிருத்தின் வைரல் டிவீட்…
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்குப் பின் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் அனிருத், அவரது டிவீட்டில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமையட்டும். நாம் அஜித் 62ல் நம்முடைய பெஸ்ட்டைக் கொடுப்போம்” எனக் கூறியுள்ளார். இந்த டிவீட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். அந்த படங்களின் பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8