சூப்பர் ஸ்டாரோட 'தர்பார்' சும்மா கிழி பாடல் குறித்து அனிருத் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' படத்தில் இருந்து சும்மா கிழி பாடல் இன்று (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த பாடல் லிரிக்ஸை அனிருத் மற்றும் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதனை சூப்பர் ஸ்டார் மற்றும் அனிருத் ரசிகர்கள் அதிக அளவில் ரீட்வீட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த பாடலை பாடியுள்ள எஸ்.பி.பி குறித்து அனிருத், காலங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் இந்த கலைஞன் இன்னும் நமக்கு தூண்டுகோளாக இருக்கிறார். சும்மா கிழி பாடலுக்காக நன்றி எஸ்.பி.பி சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Tweets about SPB in Superstar Rajinikanth's Darbar Chumma Kizhi song

People looking for online information on Anirudh Ravichander, Darbar, Rajinikanth, SP Balasubramaniam will find this news story useful.