பீஸ்ட் டிரெய்லரை பாத்துட்டு அனிருத் போட்ட ட்வீட்! பத்திக்கிட்ட டிவிட்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் டிரெய்லர்  பற்றிய அனிருத் ட்வீட் வைரலாகியுள்ளது.

Advertising
>
Advertising

"எனக்கு கல்யாணம்!!.." யாஷிகாவின் பதிவு.. ஆனாலும் இடிக்குதே.. குழப்பத்தில் ரசிகர்கள்

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளரான சஜித் நதியத்வாலா வாங்கி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தனது நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரின் கீழ் இந்தி சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளார்.

பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் நாள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிரெய்லருக்கான பின்னணி இசை அமைக்கும் பணியில் டிரெய்லரை கண்ட அனிருத் ரவிச்சந்திரன் பீஸ்ட் டிரெய்லர் குறித்து டிவிட்டரில் ட்வீட் செய்ய அது வைரலாகி வருகிறது. அந்த டிவிட்டில் மிகப்பெரிய வெடிப்புக்கு தயாராக இருங்கள் என அனிருத் ட்வீட் செய்துள்ளார்.

இந்த வாரம் OTT-யில் ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Tweet about Beast Movie Trailer goes Viral

People looking for online information on Anirudh Ravichander, Anirudh Tweet, Beast, Beast Movie Trailer, Beast Trailer, Nelson Dilipkumar, Pooja Hegde, Redin Kingsley, Vijay, Yogi Babu will find this news story useful.