சூர்யா படத்துக்காக.. மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்த பிரபல இசை அமைப்பாளர்?!.. அதிரடி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் நடிகர் சூர்யா இணையவுள்ள திரைப்படம் குறித்து, தற்போது அசத்தலான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

கடந்த ஜூன் மாதம் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில், Rolex என்னும் கதாபாத்திரத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா. ஒரு சில நிமிடங்களே அந்த திரைப்படத்தில் சூர்யா தோன்றினாலும், அவரது வில்லத்தனமான நடிப்பு, பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம், பாலா இயக்கத்தில் 'வணங்கான்', அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் ஆரம்பமாகும் என நடிகர் கார்த்தி, பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான நிகழ்ச்சியில் (Karthi Fans Festival) தெரிவித்திருந்தார். கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த' திரைப்படத்தை இயக்கி இருந்த சிறுத்தை சிவா, தற்போது சூர்யாவுடன் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.

புதிய கூட்டணி என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் இசை அமைப்பாளர் யார் என்பது பற்றி, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதற்கு முன்பு, சிறுத்தை சிவா இயக்கி இருந்த 'வேதாளம்' மற்றும் 'விவேகம்' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் அஜித் குமார் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து, தற்போது சூர்யாவை வைத்து சிவா இயக்கும் திரைப்படத்தில் மீண்டும் அனிருத் இசையமைக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது.


இதற்கு முன்பு சூர்யா நடித்திருந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், தற்போது சூர்யாவின் படத்தில் அனிருத் இணைய உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh to compose music for siva and suriya movie reports

People looking for online information on Anirudh Ravichander, Siruthai Siva, Suriya will find this news story useful.