சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

Also Read | ரிலீஸ்க்கு முன்பே பாதி வெற்றி அடைந்த DON.. BOX OFFICE வசூலுக்கு கேரண்டி! வெளியான சூப்பர் தகவல்
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர்.
நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு, Private Party மற்றும் பே (bae) ஆகிய சிங்கிள் பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன. இதில் பிரைவேட் பார்டி பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜோனிதா காந்தி - அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்த காம்போ செல்லம்மா பாடலையும், அரபிக்குத்து பாடலையும் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலிலும் அனிருத் - ஜோனிதா இணை, சிவகார்த்திகேயன் - பிரியங்கா ஜோடி போல தொன்றியுள்ளனர். இந்த பாடலின் உருவாக்க வீடியோ தற்போது ரிலீசாகி செம வைரலாகி உள்ளது. அனிருத்தும் ஜோனிதாவும் இணைந்து நடன ஒத்திகை செய்யும் வீடியோவாக இது அமைந்துள்ளது.
டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8