'வாரிசு' படப்பிடிப்பில் யானைகள்.. தயாரிப்பாளருக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சந்தானம் நடிக்கும் "AGENT கண்ணாயிரம்".. பட ரிலீஸ்க்கு முன் வெளியான SNEEK PEEK!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விலங்குகள் நல வாரியத்தின் முன் அனுமதி பெறாமல்  5 யானைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தியதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டு இந்த நோட்டீஸை வாரிசு தயாரிப்பாளருக்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பியுள்ளது.

Also Read | BREAKING: வாரிசு 'ரஞ்சிதமே' பாட்டுக்கு அடுத்து ரிலீஸாகும் 2-வது சிங்கிள்.. எப்போ? செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

Animal welfare board of India issues a notice to Varisu Producers

People looking for online information on Animal welfare board of India, Varisu, Varisu Producers, Vijay will find this news story useful.