நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியம் அவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களின் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது. பின்னர் உடலானது தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக Jodi365 எனும் பெர்ஃபெக்ட் இணையருக்கான நிறுவனத்தின் நிறுவனர் அனில் குமார், பிஹைண்ட்வுஸ் டிவிக்கு அளித்திருந்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் தமது தந்தை பற்றி பகிர்ந்திருந்தார். அதில், “எங்களது பெற்றோருக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். எங்கப்பாவே ஒரு ரெபல் மாதிரி. படிப்பில் அவருக்கு ஆர்வம் இல்லை. ஆனால் அவர் மிகவும் ஸ்மார்ட். 65 வயதில் அவர் இணையதளத்தை சௌகரியமாக பயன்படுத்தினார். டெக்னலாஜியில் அப்டேட்டாக இருந்தார். டிகிரி வாங்கவில்லை, ஆனால் மிகவும் புத்திசாலி.
எங்க அப்பா கேரளாவை சேர்ந்த தமிழர், அம்மா கராச்சி (பிரிக்கப்பட்ட பிறகான). அவர்கள் கல்கத்தாவில் சந்தித்தனர். அப்பாவுக்கு பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என டிரான்ஸ்ஃபர் ஆகி வந்தார்கள். சென்னை வந்ததும் இங்கு செட்டில் ஆகினர். அப்பா பிராமண குடும்பத்தை சேர்ந்தவர், அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும், இல்லை. சைவமாக இருந்தார்.
பின்னர் சோஷியல் Non வெஜிடேரியன் ஆனார். அம்மா, குடும்பத்தில் Non வெஜிடேரியன்தான். ஆனால் அம்மா குழந்தை நிலையிலேயே வெஜிடேரியனை தேர்வு செய்தார். எங்கள் குடும்பத்திலும் அப்படிதான், நான் சைவம், மற்ற சகோதரர்கள் அசைவம். எங்களை தேர்வு செய்ய அனுமதித்தார்கள். படிப்பில் ஆர்வம் இருந்தால் படியுங்கள், இல்லையென்றால் பரவாயில்லை என சொல்லி வளர்த்தனர். முழு சுதந்திரம் கொடுத்தனர். அந்த சுதந்திரமே எங்களை பொறுப்புடையவர்களாக்கியது” என்று குறிப்பிட்டிருந்தார்.