விமானத்தில் தவித்த பயணி.. அஜித் ஸ்டைலில் உதவிய பிரபலம்.!.. நடுவானில் நடந்த சுவாரஸ்யம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் அனில் கபூர். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அனில் கபூரின் மகள் சோனம் கபூர், மகன் ஹர்ஷவர்தன் கபூர் உள்ளிட்டோரும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் அனில் கபூர் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அப்போது அவர் அருகே தொழில் முனைவோராக இருக்கும் ஷிகா மிட்டல் என்ற பெண்ணும் அந்த விமானத்தில் பயணித்துள்ளார். இந்த பயணம் குறித்து ஷிகா மிட்டல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்த பதிவில், "எந்த பிரபலங்களுடனும் நான் புகைப்படம் எடுக்க மாட்டேன். இந்த படம் கூட நான் அனில் கபூருடன் இல்லை. இது ஒரு சக பயணியுடன் இரண்டு மணி நேரத்துக்கு மேலான இடைவிடாத உரையாடல்" எனக் குறிப்பிட்டு செல்ஃபி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். முன்னதாக விமானம் பறக்க தொடங்கிய சமயத்தில் அது குலுங்குவது போன்ற இருந்ததால் தலைக்கு மேல் இருந்த லக்கேஜ் கேபின் லேசாக ஆடி உள்ளதாக தெரிகிறது. இதனால் ஷிகா மிட்டலுக்கு சிறிதாக பதற்றமும் ஏற்பட்டுள்ளாக சொல்லப்படும் நிலையில் அவரது அருகில் இருந்த நடிகர் அனில் கபூர், ஷிகாவுக்கு ஆதரவாக அவரது பதற்றத்தை குறைக்கும் வகையில் பேசி உள்ளார்.

Image Credit : Shikha Mittal Instagram

முதலில் பதற்றம் குறித்து பேசத் தொடங்கி, பொருளாதாரத் திட்டம், திரைப்படங்கள், காஃபி என அடுத்தடுத்து தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளனர். இதனை குறித்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ள ஷிகா மிட்டல், "அந்த சமயத்தில் அவராக (அனில் கபூர்) வந்து பேசாமல் இருந்தால் அவரிடம் நானும் பேசியே இருக்க மாட்டேன். ஆனால் இந்த இரண்டு மணி நேரம், நாங்கள் நிறைய மகிழ்வான விஷயங்கள் பற்றி பேசி சிரித்தோம். இது ஏதோ விமானம் புறப்பட்டதும் தரையிறங்கிய உணர்வையே கொடுத்தது.

தரையிறங்கிய பிறகுதான் ஒன்றை யோசித்தேன். நிறைய பேர் மனப்பதற்றம் மோசமானது என கூறுவார்கள். உண்மையில் அந்த Anxiety தான் எனக்கு அனில் கபூருடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இறுதியாக டெல்லியில் எனக்கு காஃபி ட்ரீட் கொடுப்பதாக கூறிவிட்டு அனில் கபூர் சென்று விட்டார்" என தன்னுடைய பதிவில் ஷிகா மிட்டல் குறிப்பிட்டுள்ளார்.

 

பிரபல பாலிவுட் நடிகராக இருக்கும் ஒருவர் விமானத்தில் சக பயணியின் பதற்றத்தை குறைப்பதற்காக செய்துள்ள விஷயம் தற்போது பெரிய அளவில் பாராட்டுக்களையும் பெற்று கொடுத்து வருகிறது.

Anil Kapoor help co passenger in flight travel story viral

People looking for online information on Anil Kapoor, Flight travel will find this news story useful.