ANIKHA SURENDRAN : அடுத்தடுத்து கலக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா.. ஒரே மாதத்தில் 2 படம் ரிலீஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழிலும் மலையாளத்திலும் என நடிகர்கள் மம்முட்டி, அஜித், நயன் தாரா, திரிஷா, நாகர்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் மகள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “அண்ணன் சிரஞ்சீவி துப்பாக்கியால என் உயிரை மாய்ச்சுக்க முயன்றேன்” - ஓடிடி நிகழ்ச்சியில் பவன் கல்யாண் ஷாக் தகவல்.. UNSTOPPABLE 2 WITH NBK

குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பிலான என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்த இவரை பலரும் அஜித்தின் ரீல் மகள் என்றே நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அஜித்துக்கு மகளாக இவர் அந்த படங்களில் பொருந்திப் போனார். அதிலும் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் இன்னும் பலரையும் எமோஷனலாக கனெக்ட் பண்ணியதற்கு அஜித் - அனிகாவின் பாசப் பிணைப்பான நடிப்பும் பெரும் காரணம்.

Images are subject to © copyright to their respective owners.

இத்தகைய படங்களுக்கு பிறகு நடிகை அனிகா,  போட்டோஷூட் பக்கம் திரும்பினார். இவரது ஃபோட்டோஷூட்களிலேயே இவர் வளர்ந்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு இவர் பார்க்க ஹீரோயின் போல் ஆகிவருவதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். அதற்குத் தகுந்தாற்போல் அனிகாவும் பல படங்களில் நடித்து பிஸியாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் அனிகா நடிப்பிலான பூமி ராக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

மலையாளத்தில் ரஜிஷா விஜயன், வெங்கிடேஷ்ம், ஸ்ரீநாத் பாஷி, கௌதம் மேனன், அனிகா சுரேந்திரன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘Lovefully Yours Veda’. இந்த திரைப்படத்தில் அனிகா படு மாடர்னாகவும் உற்சாகமாகவும் நடனமாடக்கூடிய ஒரு பாடல் தான் பூமி ராக். பலர் கூடியிருங்கும் அரங்கில் இளைஞர்களை உற்சாகமடையும் ராக் சிங்கராக பாடிக்கொண்டே நடனமாடு அனிகா சுரேந்திரன் இந்த பாடலில் பட்டையை கிளப்பி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இதேபோல் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா உள்ளிட்ட படங்களிலும் அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். அதில் ஓ மை டார்லிங் காதல் கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் டிராமா படமாக வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஒரே மாதத்தில் அடுத்தடுத்த படங்கள் அனிகாவுக்கு வெளியாவதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்தியும் வருகின்றனர்.

Also Read | இளையராஜா இசையில், கிருத்திகா உதயநிதி இயக்கிய விழிப்புணர்வு பாடல்.! பாடிய யுவன்..

தொடர்புடைய இணைப்புகள்

Anikha Surendran Lovefully Yours Veda Oh My Darling

People looking for online information on Anikha Surendran, Lovefully Yours Veda, Oh My Darling will find this news story useful.