தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து புகழ்பெற்றவர் அனிகா சுரேந்திரன்.
Images are subject to © copyright to their respective owners.
ரசிகர்களால் ‘குட்டி நயன்தாரா’ என புகழப்படும் அனிகா சுரேந்திரனின் புகைப்படங்களும் புதிய போட்டோ ஷூட்களும் எப்போதும் இணையதளத்தை கலக்கி வருபவை. தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தல அஜித், நயன்தாரா நடித்து பெருவெற்றி பெற்ற விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக கவர்ந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இவர் கதாநாயகியாக நடித்துள்ள முதல் படம் ‘புட்டபொம்மா’. இதனை அடுத்து அவருடைய அடுத்த திரைப்படம் ‘ஓ மை டார்லிங்’. ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதை ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ளார். இதில் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாகவும் மெல்வின் ஜி பாபு நாயகனாகவும் நடித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் முத்தக் காட்சிகள் இடம்பெற்ற நிலையில் இதுகுறித்து சோசியல் மீடியாவில் அதிகளவில் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் முன்னர் பேசியிருந்தபோது,"இந்தத் திரைப்படம் முழுநீள காதல் கதை எனும்போது அதில் முத்தக்காட்சிகள் தவிர்க்க முடியாதது. படத்தின் கதை சொன்னபோதே, இயக்குநர் கதையில் முத்தக் காட்சிகளின் முக்கியத்துவத்தையும் சொன்னார். கதைக்குத் தேவைப்பட்டதால்தான் நடித்தேனே தவிர அதில் ஆபாசம் எதுவும் இருக்காது. படம் பார்க்கும்போது அது புரியும்" எனத் தெரிவித்திருந்தார்.
Image Credit : Anika Surendran | Instagram
இந்நிலையில் நடிகை அனிகாவிடம் முத்தக் காட்சி குறித்து இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாகவும் அதில் நடித்த போது சங்கடமாக இருந்ததா? எனவும் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதில் அளித்திருக்கும் அனிகா,." நடிக்கும்போது அந்த அளவு வினோதமாக உணரவில்லை. ஆனால், அதன்பின்னர் அப்படி இருக்கிறது. மக்கள் இதனை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டது தான் வினோதமாக இருக்கிறது. இது தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.