ஆக்ஷனில் இறங்கிய கோபி… ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்… ’பாக்கியலட்சுமி’ யில் களேபரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் லீலைகள் பற்றி ராதிகாவுக்கு தெரிந்துவிட பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் T ராஜேந்தர்… சந்தித்து நலம் விசாரித்த கமல்… latest pic

பாக்கியலட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் கோபி, தன் மனைவிக்கு துரோகம் செய்து, ராதிகாவோடு காதலில் இருப்பதும், அதை தொடர்ந்து மறைத்துக்கொண்டு வந்ததும் பரபரப்பாக சென்றன.

மாட்டிக்கொண்ட கோபி

ஒருகட்டத்தில் ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் உருவாக, நிச்சயமாக அவரின் குடும்பத்தை பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, மனைவி என்று கூறி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்கிறார். இதனைக் கண்டதும், கண்ணீர் விட்டு கதறும் ராதிகா, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.  இதேபோல போதையில் வீட்டுக்கு செல்லும் கோபி அங்கும் உளறிவிட, பாக்கியாவுக்கும் சந்தேகம் வருகிறது.

ராதிகாவுக்கு முழு உண்மையும் தெரிந்தாலும், இன்னும் தன் தோழியான பாக்கியாவிடம் கோபியைப் பற்றிய உண்மையை சொல்லவில்லை. இந்நிலையில் தற்போது பாக்கியாவின் சந்தேகமும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கோபியின் காரில் இருந்து பிளவுஸ் மற்றும் அதற்கான பில்லை எடுக்கும் பாக்கியா கோபியிடமே சென்று கேட்டார். ஆனால் கோபி பதில் சொல்லாமல் தப்பித்துவிட்டார்.

ஆக்ஷனில் இறங்கிய கோபி

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராதிகாவின் வீட்டுக்கு செல்லும் கோபி அங்கு குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்க்கும் ராதிகா கோபமாகி திட்டி அனுப்புகிறார். அப்போது அங்கு வரும் ராதிகாவின் முதல் கணவர் கோபியை வெறுப்பேற்ற, அவரைக் கடுமையாக தாக்குகிறார் கோபி. இதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர். கோபி சென்றதும் ராதிகாவின் கணவர், அவரிடம் சென்று அசிங்கமாக பேச அவமானத்தில் குறுகிப் போகிறார் ராதிகா. இதையடுத்து ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read | BGM 8: “ஒரு நாள் நீ கண்டிப்பா புரிஞ்சுக்குவ… இப்போ புரியுது”… செல்வராகவனிடம் சொன்ன தனுஷ்

தொடர்புடைய இணைப்புகள்

Angry Gopi fight Radhika insult Bhagyalakshmi serial

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.