கார்த்திக் ராஜா இசையில் பிசாசு-2 படத்தின் மனதை உருக வைக்கும் முதல் சிங்கிள் பாடல்! DON'T MISS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016ல் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது.

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று வெளியீட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான "உறவின் பாட்டு" எனும் பாடலை கார்த்திக் ராஜா இசையில் சித் ஸ்ரீ ராம் பாடியுள்ளார், கவிஞர் கபிலன் பாடல்வரிகளை எழுதியுள்ளார். 

இந்த முதல் பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (02.10.2021) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன் படி இன்று காலை 10.31 மணியளவில் இயக்குனர் மிஷ்கின் இந்த பாடலை வெளியிட்டார். 

கார்த்திக் ராஜா இசையில் பிசாசு-2 படத்தின் மனதை உருக வைக்கும் முதல் சிங்கிள் பாடல்! DON'T MISS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Andrea mysskin pisasu 2 movie first single released

People looking for online information on Andrea Jeremiah, Karthik Raja, Mysskin will find this news story useful.