"தி வெயிட் ஈஸ் ஓவர்".. மிஷ்கின் பட FIRST LOOK-ஐ வெளியிடும் வெற்றிமாறன்! சென்சேஷனல் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆண்ட்ரியா.

துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்க செய்யும் இவரை வெற்றிமாறனின் வடசென்னையில் பலரும் இவரது நடிப்புக்காக பாராட்டினர். வடசென்னை வட்டார மொழியை உள்வாங்கி பேசியதிலும் சரி, தன் புதுமையான நடிப்பிலும் சரி லைக்ஸ் அள்ளினார்.

பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில் வித்தையில் கைதேர்ந்தவராக மாஸ்டர் படத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு விஜயுடன் இணைந்து க்ளைமாக்ஸில் ஒரு சண்டைக்காட்சியே இருக்கும்.

இதனிடையே அரண்மனை, அவள் என பேய் படங்களில் ஆண்ட்ரியா பட்டையை கிளப்ப ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு முதல் பாகம் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி வந்தன. கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் first look போஸ்டரை தேசிய விருது பெற்றவரும், ஆண்ட்ரியா நடித்த வடசென்னை படத்தை இயக்கியவருமான இயக்குநர் வெற்றிமாறன் நாளை (ஆகஸ்டு 3, 2021) மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Andrea Mysskin Pisaasu2FirstLook update Vetrimaaran release

People looking for online information on Andrea Jeremiah, Andrea Jermiah, Mysskin, Pisaasu, Pisaasu2, Pisaasu2FirstLook, Vetrimaaran will find this news story useful.