"ஓ சொல்றியா மாமா" ஆண்ட்ரியாவின் அசத்தல் EGYPT வீடியோ - செம குஷில இருக்காங்க போல !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆண்ட்ரியாவின் அசத்தல் Egypt வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Andrea jeremiah magical Egypt video hits Internet
Advertising
>
Advertising

 


பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தனக்கேற்ற கதைகளை மட்டுமே தெளிவாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா, சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் பன்முகத்திறமைகளை கொண்டுள்ளார்.

Andrea jeremiah magical Egypt video hits Internet

கதாநாயகியாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் ஆண்ட்ரியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து  பல வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளார். இவர் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் புஷ்பா படத்தில் "ஓ சொல்றியா மாமா" என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி மெகா ஹிட் ஆனது. இதன் மூலம் இவருக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்து கொண்டார்.

தற்போது இவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை  தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்கிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முழுமை பெற்ற நிலையில், அதற்கான post-production வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது.

 

மேலும் கா, நோ என்ட்ரி  படத்திலும்  நடித்து கொண்டிருக்கிறார். அடுத்த வருடம் இவரது நடிப்பில் பல படங்கள் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கின்றது. இவரை பற்றி இப்போது ஹாட்டாக பேசப்பட்டுக் கொண்டிருப்பது புஷ்பா படத்தின் பாடல் தான். இவர் பாடிய "ஓ சொல்றியா மாமா" பாடலுக்கு நடிகை சமந்தா போட்ட குத்தாட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தான் எகிப்திற்குச்சென்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் இருக்கீங்க போல என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


#Andreajeremiah #ஆண்ட்ரியா #AndreaEgyptVideo

தொடர்புடைய இணைப்புகள்

Andrea jeremiah magical Egypt video hits Internet

People looking for online information on Andrea, Andreaegyptvideo, Andreajeremiah, Andrealatestvideo will find this news story useful.