ஆண்ட்ரியாவுக்கு கெடச்ச கோல்டன் விசா ... வைரலாகும் புகைப்படம் - வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Advertising
>
Advertising

நடிகை ஆண்ட்ரியா துபாய் அரசின் கோல்டன் விசா சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா...

தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் விதமாக பல பிரபலங்களுக்கு கோல்டன் விசா எனப்படும் புதிய நடைமுறையை துபாய் அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள், காவல்துறை சேர்ந்த பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விசாவைப் பெறும் நபர் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடிமகனாகக் கருதப்படுவார்கள். இதனால் எந்த விசாவும் இல்லாமல் எளிதாக எப்போது வேண்டுமானாலும் துபாய்கு சென்று வரலாம். இந்த கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதுமானது.

தென்னிந்திய நடிகர்களுக்கு கோல்டன் விசா...

மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு முதலில் இந்த கோல்டன் விசாவை துபாய் அரசாங்கம் கொடுத்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த ஆண்டு இவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. அதன் பிறகு டோவினோ தாமஸ்  இந்த கோல்டன் விசாவை பெற்றார். இவர்களை தொடர்ந்து துல்கர் சல்மான், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கு இந்த கோல்டன் விசா அளிக்கப்பட்டது. இது சம்மந்தமான புகைப்படங்களும் இணையத்தில் பரவலாகக் கவனம் பெற்றன.

லிஸ்ட்டில் இணைந்த ஆண்ட்ரியா...

இந்நிலையில் இப்போது இந்த கோல்டன் விசாவை நடிகை ஆண்ட்ரியா பெற்றுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை ஆண்ட்ரியா பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞர், நடிகை, பாடகி என பன்முக திறமையோடு செயல்பட்டு வருபவர். அவர் நடிப்பில் வெளியான தரமணி படம் பாராட்டுகளைக் குவித்தது. இப்போது அவர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Andrea Jeremiah dubai golden visa acknowledgement

People looking for online information on Andrea, Dubai, Golden Visa will find this news story useful.