10 வருஷம் முன்ன கட்டுன அதே சேலையில் இப்போ.. ஆண்ட்ரியாவின் வைரல் POST!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் செம வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

நடிகை ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடல் மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் ஆண்ட்ரியா வெளியிட்ட 10 வருடங்களுக்கு முந்தைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம், கமல் - பூஜா - ஆண்ட்ரியா ஆகியோர் விஸ்வரூபம் படத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. சமீபத்தில் டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய நிகழ்வான 8 ஆவது Behindwoods Gold Medals Awards நிகழ்ச்சி (மே 21 & 22) ஆகிய இரு தினங்களில், சென்னை தீவுத் திடல் மைதானத்தில் நடைபெற்றது.

நடிகை ஆண்ட்ரியா Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சி மேடையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துக்கு நடுவே புஷ்பா படத்தின் 'ஒ சொல்றியா மாமா' பாட்டை பாடினார். இந்நிகழ்வுக்கு நடிகை ஆண்ட்ரியா பேன்ஸி சேலையில் வந்திருந்தார். 

இந்த சேலையுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து "அதே சேலை, அதே நபர்! 10 வருடங்களில்" என பதிவிட்டுள்ளார். ஆண்ட்ரியா கடைசியாக லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்' மற்றும் சுந்தர் சி யின் 'அரண்மனை 3' படத்தில் நடித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Andrea Jeremiah 10 Year challenge Latest Post goes viral

People looking for online information on Andrea Jermiah, Behindwoods, Kamal Haasan will find this news story useful.