மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தின் வைரலாகும் EXCLUSIVE புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின், அதீதி ராவ் ஹைத்ரி நடிப்பில் சைக்கோ படத்தை இயக்கி இருந்தார்.

பின் பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான "உறவின் பாட்டு" பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் நாள் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிசாசு-2 படத்தின் பிரத்யேக புகைப்படங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகியப்படங்களில் நடிகை ஆண்ட்ரியா, நடிகை பூர்ணா காட்சியளிக்கின்றனர். 

Take a look!

தொடர்புடைய இணைப்புகள்

ANDREA EXCLUSIVE PICTURES FROM MYSSKIN PISASU 2

People looking for online information on Andrea Jermiah, Mysskin, Pisasu2 will find this news story useful.