“எதுவுமே அவ்ளோ WORTH இல்ல”… சந்தோஷ் நாராயணன் இசையில் பிரசாந்தின் ‘அந்தகன்’ CATCHY பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான என் காதல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ‘மூடர்கூடம்’ நவீனின் அடுத்த படம்… டீசரை வெளியிடும் பிரபல நடிகர்… வெளியான தகவல்

அந்தாதூன் – அந்தகன்…

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். இந்த படம். கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் 'அந்தாதூன்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்திக் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பிரபல கலைஞர்கள்..

இந்த படத்தில், பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். படத்துக்கு தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும், படத்தின் டப்பிங், பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ரிலீஸ்…

இந்நிலையில் இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கலைப்புலி தாணுவின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு  சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  அதன்படி இந்த படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செகண்ட் சிங்கிள் பாட்டு…

முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்ற ‘என் காதலே’ என்ற பாடல் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான “யோசிச்சு யோசிச்சு” பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. Take it easy mode- ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் கவர்ந்திழுக்கும் எளிமையான வரிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த பாடல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடலை ஹரிச்சரன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Also Read | #Suriya41 “மீண்டும் set-க்கு செல்ல காத்திருக்கிறேன்”… இயக்குனர் பாலாவோடு சூர்யா –Viral BTS Pic

தொடர்புடைய இணைப்புகள்

Andhagan movie second single YOSHICHU released

People looking for online information on Andhagan movie, Prashanth, Second single Yoshichu release updates, Thiagarajan will find this news story useful.