இந்தியில் அயுஷ்மன் கிர்ரானா, தபு, ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்து வெளியான பிளாக் காமெடி க்ரைம் தில்லர் படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகிய இந்தப்படம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் பெற்றது.
3 தேசிய விருதுகளை குவித்த இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தியாகராஜன் இயக்க, அவரது மகனும் நடிகருமான பிரஷாந்த் நடிக்கிறார். இந்த படத்துக்கு அந்தகன் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தபு கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இந்நிலையில் சிம்ரன் தனது ட்விட்டரில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதில், பிரசாந்துடன் சேர்ந்து நடித்த ‘கண்ணெதிரே தோன்றினாள்’ பட ஸ்டில்லையும், தற்போது பிரசாந்துடன் நடித்துவரும் ‘அந்தகன்’ திரைப்பட ஸ்டில்லையும் ஒரு சேர பகிர்ந்துள்ளார். அத்துடன் காலம் ஓடிவிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சிம்ரன் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸின் ஃபேவ்ரைட்டான ஹீரோயின் என்பதும் அண்மையில் ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜின் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.