பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ராவின் மறைவு குறித்து தொகுப்பாளினி மணிமேகலை உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் சித்ரா. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து இவர் பிரபலமானார். இந்த தொடர் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று கொடுத்தது.
இந்நிலையில் தற்போது நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை சித்ராவின் மறைவு குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை ஒரு உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நீ எவ்வளவு வலிமையான பெண் என்பது எனக்கு தெரியும். ஆனால், இந்த முடிவை நீ ஏன் எடுத்தாய் என தெரியவில்லை.
நேற்று கூட ஒரே மேக்கப் ரூமில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி, படப்பிடிப்புக்கு தயாரானோம். ஆனால் இன்று இப்படி ஒரு மோசமான செய்தி. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, நீ இல்லை என்று'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.