விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல பிரபலங்களுக்கும் நெருங்கிய தோழி என்பது பலரும் அறிந்த உண்மை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்த அவரிடம் ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.

அப்பொழுது ஒருவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு தொகுப்பாளினி டிடி கூறியது "நடிகை நயன்தாராவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரால் எதையும் தனக்குள்ளே வைத்துக்கொள்ள முடியாது. முக்கியமாக அவருக்கு கோபமோ அல்லது வெறுப்போ வந்தால் உடனே எனக்கு போன் செய்து நடந்த எல்லாவற்றையும் என்னிடம் கூறி விடுவார். அவர் மிகவும் நேர்மையானவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். அதுதான் அவரிடம் மிகவும் சிறந்த குணம். அவர் 100% நேர்மையானவர்" என்று கூறியுள்ளார். ஆம் அந்த நேர்மை தான் அவரை உயர்த்தி இருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை.