"நான் சொன்ன மாதிரியே பண்ணியா நெல்சா??.." .. BEAST விஜய் பேட்டி - தொகுப்பாளினி வைரல் POST

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில், அடுத்ததாக வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, 'பீஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertising
>
Advertising

Dowry பற்றி கல்லூரி புத்தகத்தில் வந்த விஷயம்?.. "அடேங்கப்பா.." விளாசித் தள்ளிய Vignesh Shivan.. வைரல் பதிவு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ள நிலையில், அவரது இசையில் ஏற்கனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் தான், தற்போது வரை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டிலும், ட்ரெண்டிங்கிலும் உள்ளது.

இன்னும் பத்து நாள் கூட இல்ல..

இதனைத் தொடர்ந்து, சில போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு (02.04.2022) முன் பீஸ்ட் டிரைலர் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. பீஸ்ட் வெளியாக இன்னும் பத்து நாட்கள் கூட இல்லாததால், திரைப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பின் விஜய் என்ட்ரி

இதனிடையே, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் பேட்டி அளிப்பது பற்றி ஸ்பெஷல் ப்ரோமோக்கள் வெளிவந்துள்ளது. சன் டிவியில் வரும் 10 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு 'விஜய்யுடன் நேருக்கு நேர்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான ப்ரோமோக்களை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது.

நெல்சனின் கேள்வி, விஜய்யின் பதில்

இயக்குனர் நெல்சன் கேள்விகளை முன் வைக்க, மிகவும் கலகலப்பாக விஜய் பதிலளிக்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. விஜய்யிடம் துருவி துருவி நெல்சன் ஜாலியான கேள்விகளை கேட்க, விஜய்யும் கூலாக பதிலளிக்கிறார். திரைப்படம் மற்றும் இசை வெளியீடு தாண்டி, விஜய்யை இப்படி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கவுள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பாராட்டிய திவ்யதர்ஷினி

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, 'விஜய்யுடன் நேருக்கு நேர்' நிகழ்ச்சி குறித்து செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தன்னுடைய ட்வீட்டில், "ரொம்ப வருஷ கனவு தளபதிய interview எடுக்கணும்னு, இன்னைக்கி என் நண்பன் அத பண்ணிட்டான். நானே interview பண்ண அளவுக்கு சந்தோஷம். கலக்கி இருப்பே நெல்சா. நாங்க எல்லாரும் காத்துருக்கோம். நான் சொல்லி கொடுத்த மாதிரி பண்ணியா?" என ஜாலியாக, அதே வேளையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி, ஏற்கனவே விஜய் டிவியில் நிகழ்ச்சிளை இயக்கி இன்று பெரிய உயரத்திற்கு சென்றுள்ள நண்பர் நெல்சனுக்கு வாழ்த்துக்களைக் கூறி, தான் இருப்பதை போன்ற உணர்வை தருவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது பற்றி, ரசிகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

"4 கார் இருக்குறப்போ எதுக்கு சைக்கிள்ல போனீங்க??.." நெல்சனின் கேள்வி & விஜய் பதில்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Anchor dd tweets about vijayyudan nerukku ner show

People looking for online information on Anchor DD tweets, Anchor Dhivyadharshini, Beast, Dhivyadharshini, Nelson Dilikpkumar, Vijay, Vijayyudan nerukku ner show will find this news story useful.