90S கிட்ஸ்க்கும் 2K கிட்ஸ்க்கும் விருப்பமான விஜய் தொலைக்காட்சியின் மூலம் உலகெங்கும் அறியப்பட்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
அண்மையில் மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி அங்கு தான் சென்ற உணவகங்கள், கண்டுகளித்த பொழுதுபோக்குகளை பற்றிய வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டார்.
அதில் ஆஜ்ஸிஜன் டியூபுடன் தண்ணீரில் இறங்குவதற்கு அங்கிருந்த கைடு அழைத்துச் செல்கிறார். ஆனால் டிடியோ , “என்ன விட்ருங்க.. நான் வரமாட்டேன்.. (நான் இனி ஸ்விம்மிங்கிற்கே வரமாட்டேன் என்பது போல்)” என கதறுகிறார். இதனிடையே தன்னுடைய வழிகாப்பாளரிடம் ‘உங்களுக்கு என் மீது அன்பு இருக்கிறதா?’ என தண்ணீரில் இறங்கும் முன்பு உறுதிப்படுத்திக் கொண்டு நகைச்சுவையாக கலாட்டா செய்கிறார்.
இதில் ஒரு வீடியோவில் கைத்தடி ஒன்றை பிடித்துக் கொண்டு டிடி பேசுவதை பார்த்த சிலர் என்ன ஆச்சு, ஏன் சப்போர்ட்டுக்காக கைத்தடி வைத்துள்ளீர்கள் என கேட்டு வருகின்றனர். மேலும் “மாலத்தீவின் முக்கிய பொருளாதாரமே சுற்றுலா மூலம் அவர்களுக்கு கிடைப்பதுதான். அதனால் அவர்கள் சுற்றுவலாவாசிகளை மகிழ்ச்சியுடன் ட்ரீட் செய்கின்றனர்.” என்றும் டிடி குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: 50 நாள்!.. இன்ஸ்டாகிராமில் 'மாஸ்டர்' ஹீரோயின் உருக்கமான போஸ்ட்!