நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகளுடன் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக டிவி நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி பிரபலமானவர் அர்ச்சனார். இவரின் நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கலக்கினார் அர்ச்சனா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து மகளுடன் எடுத்து வரும் க்யூட் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அர்ச்சனா தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அம்மா மகளாகவும், மகள் அம்மாவாகவும் இருப்பது போல ஒரு க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அர்ச்சனா, ''உங்கள் குழந்தைகளிடம் குழந்தையாக இருங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களை எப்படி பார்த்து கொள்கிறார்கள் என்று தெரியும்'' என பதிவிட்டுள்ளார். அர்ச்சனா வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.