சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் செய்தித் துறையில் இருந்து தங்களது திறமை மட்டும் அழகால் சினிமா துறைக்குள் நுழைந்தவர்கள் வெகு சிலரே. அதில் பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத், லாஸ்லியா போன்றவர்களை எளிதில் பட்டியலிடலாம். அதிலும் அனிதா சம்பத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் சமீபத்தில் தனது காதலரான பிரபாகரனை அவர் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நடிகை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு தலைப்பாக "எட்டாங்கிளாஸ் அனிதா சம்பத்..ஆசிரியர்கள் தினத்தன்று யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கு யாரோ கேமரா கொண்டு வந்தாங்க..அப்ப ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது டக்கென எடுத்தது.. வெளிச்சத்துக்கு எதிர நின்னு போட்டோ எடுக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம்..😄வகுப்புலயே height orderல முதல்ல நிக்கிற குட்டி பொன்னு 12th வரைக்குமே நான் தான்.." என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.